தருவைகுளத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கானமண்டல அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டி
தருவைகுளத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மண்டல அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டி வியாழக்கிழமை நடந்தது.
தூத்துக்குடி அருகே தருவைகுளத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மண்டல அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டி நேற்று நடந்தது. இதில் 800 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
மண்டல விளையாட்டு போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மண்டல அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான கடற்கரை கைப்பந்து போட்டி தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் கடற்கரையில் நடந்தது. போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் ஆர்.வீ.வீரபத்திரன் போட்டிகளை தொடங்கி வைத்தார். இதே போன்று மண்டல அளவிலான டென்னிஸ் விளையாட்டு போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன் தொடங்கி வைத்தார். இந்த போட்டிகளில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர்.
கலந்து கொண்டவர்கள்
போட்டி தொடக்க நிகழ்ச்சிகளில் மாவட்ட விளையாட்டு அலுவலர்கள் அந்தோணி அதிர்ஷ்டராஜ் (தூத்துக்குடி), கிருஷ்ண சக்கரவர்த்தி (நெல்லை), ராஜேஷ் (தென்காசி) விளையாட்டு விடுதி மேலாளர்கள் சிவா (கோவில்பட்டி), ரத்தினராஜ் (நெல்லை), தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அண்டோ ரூபன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அமலதாசன், முன்னாள் கைப்பந்து வீரர் ஜேசுராஜன், தருவைகுளம் பீச் கைப்பந்து விளயைாட்டு கழக தலைவர் ஆனந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.