இடைசெவல் பகுதியில்பருத்தி பயிரில் கூன் வண்டு தாக்குதல்


இடைசெவல் பகுதியில்பருத்தி பயிரில் கூன் வண்டு தாக்குதல்
x
தினத்தந்தி 22 Dec 2022 6:45 PM GMT (Updated: 22 Dec 2022 6:46 PM GMT)

இடைசெவல் பகுதியில் கூன் வண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட பருத்தி பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி தாலுகா வில்லிசேரி, இடைசெவல், ஜமீன் தேவர்குளம் கிராம பகுதிகளில் நடப்பாண்டில் சுமார் 2,500 எக்டர் பரப்பளவில் மானாவாரி மற்றும் இரவை பயிராக பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற விதை விற்பனையாளர்களிடமிருந்து விவசாயிகள் விதைகளைப் பெற்று பயிரிட்டுள்ளனர். நன்கு வளர்ந்துள்ள பருத்தி பயிரில் தற்போது தண்டு கூன் வண்டு தாக்குதல் காணப் பட்டுள்ளதாக விவசாயிகள் கொடுத்த தகவலின் பேரில் இடைசெவல் கிராமத்தில் தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் சாந்தி ராணி தலைமையில் விதை ஆய்வு துணை இயக்குனர் வனஜா, கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி பேராசிரியர்கள் ஆல்வின் ஜோசப், லெனின், மற்றும் சோபா ஆகியோர் கொண்ட வல்லுனர் குழுவினர் வயல்களுக்கு சென்று பருத்தி செடிகளில் ஆய்வு நடத்தினர். அப்போது, பருத்தி பயிரில் காணப்பட்ட தண்டு கூன்வண்டு தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய பயிர் பாதுகாப்பு உத்திகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை வழங்கினா்.

இந்த ஆய்வில் கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் நாகராஜ், பயிர் காப்பீடு வேளாண்மை உதவி இயக்குனர் மார்ட்டின் ராணி, உதவி வேளாண்மை அலுவலர் செல்வராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story