நெல்லை கலெக்டர் அலுவலகத்தில்இரவில் பொதுமக்கள் போராட்டம்


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில்இரவில் பொதுமக்கள் போராட்டம்
x

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இரவில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

திருநெல்வேலி

நெல்லை ராஜவல்லிபுரம் இந்திரா நகரில் பொதுமக்கள் சிலர் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். மேலும் அவர்கள் அந்த இடத்துக்கு பட்டா கேட்டு அரசு அதிகாரிகளுக்கு தொடர்ந்து விண்ணப்பித்து வந்துள்ளனர். இந்த நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று புறம்போக்கு இடத்தில் இருப்பதாக கூறி, தொழுவம் மற்றும் காம்பவுண்டு சுவரை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் நேற்று இரவு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து போராட்டம் நடத்தினர். இதனை அறிந்த அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story