பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் தண்ணீரில் மூழ்கிய வாலிபர் உடல் மீட்பு


பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில்   படகு கவிழ்ந்த விபத்தில் தண்ணீரில் மூழ்கிய வாலிபர் உடல் மீட்பு
x

தண்ணீரில் மூழ்கிய வாலிபர் உடல் மீட்பு

ஈரோடு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கரியாம்பாளையம் காலனியை சேர்ந்தவர் சிவகுமார். இவருடைய மகன் நித்திஷ் குமார் (வயது 18). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் செடிகள் பராமரிக்கும் பணியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிைலயில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நித்திஷ்குமார் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் உள்ள சுஜில்குட்டை கிராமத்தில் இருக்கும் தன்னுடைய உறவினரை பார்க்க நண்பர்கள் 4 பேருடன் சென்றார். அப்போது அவர் தன்னுடைய நண்பர்கள் 4 பேருடன் அணையின் நீர்த்தேக்க பகுதியை பார்ப்பதற்காக பரிசலில் சென்று உள்ளார். கரிெமாக்கை என்ற இடத்தில் பரிசலில் சென்றுகொண்டிருந்தபோது காற்று வேகமாக வீசியது. இதில் பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், நித்திஷ்குமாருடன் வந்த 4 நண்பர்களும் தப்பி கரை ஏறினர். ஆனால் நித்திஷ்குமார் நீரில் மூழ்கி இறந்தார். இதுபற்றி அறிந்ததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பகுதியை சேர்ந்த மீனவர்களுடன் சேர்ந்து நித்திஷ்குமாரின் உடலை தேடி வந்தனர். இந்த நிலையில் கரிமொக்கை பகுதியில் நேற்று மிதந்த அவருடைய உடலை மீனவர்கள் மீட்டு வந்தனர். உடனே நித்திஷ்குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story