திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்


திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 20 Aug 2023 7:00 PM GMT (Updated: 20 Aug 2023 7:00 PM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் ெசய்தனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் ெசய்தனர்.

சுப்பிரமணிய சுவாமி கோவில்

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. கடற்கரை அருகில் இந்த கோவில் அமைந்திருப்பதால், திருவிழா காலங்களில் தவிர்த்து மற்ற நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

அரசியல் கட்சி பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தரிசனம் செய்ய வருவதால் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சாமி தரிசனம்

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

அதிகாலை முதலே கோவிலில் குவிந்த பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

100-க்கும் மேற்பட்ட திருமணம்

மேலும் நேற்று ஆவணி மாத முதல் சுபமுகூர்த்த தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து திருமண ஜோடிகள் கோவிலுக்கு வந்தனர். இதனால் கோவில் வளாகம் திருவிழா போல் காட்சியளித்தது. நேற்று மட்டும் 100-க்கும் மேற்பட்ட திருமணம் நடைபெற்றது.


Next Story