தூத்துக்குடியில்லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி திறப்பு


தூத்துக்குடியில்லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி திறப்பு
x
தினத்தந்தி 23 Dec 2022 6:45 PM GMT (Updated: 23 Dec 2022 6:46 PM GMT)

தூத்துக்குடியில் லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சியை வெள்ளிக்கிழமை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அமெரிக்கன் ஆஸ்பத்திரி ரவுண்டானா அருகே உள்ள சிவன் கோவில் மைதானத்தில் லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி, பொருட்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த பொருட்காட்சி அடுத்த மாதம் (ஜனவரி) 29-ந் தேதி வரை நடக்கிறது.

நிகழ்ச்சியில் மாநகர தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த் கேபிரியேல்ராஜ், பொருட்காட்சி அமைப்பாளர்கள் சுரேஷ்குமார், சங்கர், சத்தியநாராயணன், சவுந்தரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story