சி.கே.மங்கலத்தில், புனித பேதுரு ஆலய திறப்பு விழா


சி.கே.மங்கலத்தில், புனித பேதுரு ஆலய திறப்பு விழா
x
தினத்தந்தி 21 Feb 2023 12:15 AM IST (Updated: 21 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சி.கே.மங்கலத்தில் புனித பேதுரு ஆலய திறப்பு விழா நடந்தது. சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் ஆயர் சூசை மாணிக்கம் அர்ச்சிப்பு செய்தார்.

ராமநாதபுரம்

தொண்டி,

சி.கே.மங்கலத்தில் புனித பேதுரு ஆலய திறப்பு விழா நடந்தது. சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் ஆயர் சூசை மாணிக்கம் அர்ச்சிப்பு செய்தார்.

புனித பேதுரு ஆலயம்

திருவாடானை அருகே உள்ள சி.கே.மங்கலத்தில் பிரசித்தி பெற்ற புனித பேதுரு ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 108 அடி உயரத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கோபுரம் அமைக்கப்பட்டு அதில் அன்னை வேளாங்கண்ணி மாதா, சிவகங்கை மறை மாவட்ட பாதுகாவலர் புனித அருளானந்தர், சி.கே.மங்கலம் பங்கின் பாதுகாவலர் புனித பேதுரு ஆகியோரின் சொரூபங்கள் வைக்கப்பட்டு உள்புறங்களிலும் வெளிப்புறங்களிலும் நேர்த்தியான அழகிய வேலைப்பாடுகளுடன் ஆலயம் முழுமையாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தில் திருப்பலி நடைபெறும் பீடம் நவீன முறைப்படி அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட புனித பேதுரு ஆலய திறப்பு விழா மற்றும் புனிதபடுத்தும் விழா நடைபெற்றது.

அர்ச்சிப்பு

சி.கே.மங்கலம் புனித பேதுரு ஆலய பங்கு தந்தை சாமுஇதயன் தலைமையில் நடைபெற்ற விழாவில் கோவை தொழிலதிபர் ஜான் கென்னடி புதிய கோபுரத்தை திறந்து வைத்தார். ஆலயத்தை சென்னை தொழிலதிபர் எல்.அமல்ராஜ், சென்னை தொழிலதிபர் எம்.எழிலரசன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

மதுரை ஜெ.எஸ்.பி.ஆர். கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிர்வாக இயக்குனர் எஸ். பவுல் செங்கோல் ராஜ் புதிய பீடத்தை திறந்து வைத்தார். சென்னை வக்கீல் ஏ.பிரான்சிஸ் இளங்கோ நன்றி கூறினார். அதனை தொடர்ந்து சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் ஆயர் செ.சூசை மாணிக்கம் ஆலயத்தை அர்ச்சிப்பு செய்து புனிதப்படுத்தினார்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள பீடத்தில் முன்னாள் ஆயர் சூசை மாணிக்கம் தலைமையில் 120 அருட்தந்தையர்களால் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அருட்தந்தை சிரில் சிறப்பு மறையுறை நிகழ்த்தினார். பின்னர் பங்குத்தந்தை சாமுஇதயன், அருட்தந்தையர்கள், முதன்மை நன்கொடையாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி நன்றி தெரிவித்தார்.

இதில் ஆயர் மற்றும் பங்கு தந்தைக்கு சேவியர் ராஜ், அனிதா ஆகியோர் இறைமக்கள் சார்பாக வாழ்த்துரை வழங்கினர். அல்போன்ஸ் ஆசிரியர் தலைமையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பாடகர் குழுவினர் பூஜை பாடல்களை பாடினர்.

பூரண கும்ப மரியாதை

இந்நிகழ்ச்சிகளில் திருச்சி மறை மாவட்ட முதன்மை குரு அந்துவான், முன்னாள் முதன்மை குரு அருட்தந்தை யூசின், பொருளாளர் அருட்தந்தை அகஸ்டின், திருச்சிலுவை சபையின் மாநில தலைவர் அருட்தந்தை கஸ்பார், ஆர்.எஸ்.மங்கலம் மறை வட்ட அதிபர் அருட்தந்தை கிளமெண்ட் ராஜா, சி.கே.மங்கலம் முன்னாள் பங்கு தந்தையர்கள் ரெய்மண்ட் ஜோசப், ஜேசுதாஸ் கிறிஸ்டி, அந்தோணிசாமி, தாமஸ் ஆகியோர் உள்பட ஏராளமான அருட்தந்தையர்கள், சுமார் 50-க்கும் மேற்பட்ட அருட் சகோதரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை சிவகங்கை மறை மாவட்ட அருட்பணி மைய இயக்குனர் அருட்தந்தை அமலன் அடிகளார், அருட்தந்தை ஜோஸ்வா, டென்சிங், ஆசிரியை அமுதா ஜெயசீலி ஆகியோர் தொகுத்து வழங்கினர். முன்னதாக பங்கு இறை மக்கள் சார்பில் ஆயர் சூசை மாணிக்கம், பங்குத்தந்தை சாமு இதயன், மற்றும் அருட்தந்தையர்களுக்கு 35 பெண்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், அங்காள ஈஸ்வரி வெல்டிங் ஒர்க்ஸ் உரிமையாளர் எம்.கலைராஜன், ஏ.அன்புச்செல்வன், மாதா காம்ப்ளக்ஸ், மாத, லாட்ஜ் உரிமையாளர் திருவடிமிதியூர் எஸ்.அற்புதராஜ், ஜோதி டிரேடர்ஸ் உரிமையாளர் ஏ. சேவியர் ராஜ், சி.கே.மங்கலம் மன்னன் ஸ்டீல்ஸ் உரிமையாளர் சுப. காளமேகம், சீக்கியமங்கலம் ராஜா ஸ்டோர்ஸ் உரிமையாளர் ஏ. மரியலூயிஸ், எம்.ஆரோக்கியராஜா, விஷ்வா டிராக்டர், என்ஜினீயரிங் ஒர்க்ஸ், தேவி ஆட்டோ ஸ்டோர்ஸ் உரிமையாளர் கே.மகாலிங்கம், சி.கே.மங்கலம் சரவணா, ஹோண்டா உரிமையாளர் நவநீதன், சகுந்தலா மோட்டார்ஸ் உரிமையாளர் ராஜ்மோகன், மூவர் எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் எம்.பொனிப்பாஸ், ஆர்.எஸ்.கே. மெட்டல் ரூபிங், ஆர்.எஸ்.கே. ஸ்டீல்ஸ், உரிமையாளர் சுப்பிரமணி, தொண்டி கோல்டன் ஸ்டீல் கம்பெனி உரிமையாளர்கள் ஜாகீர், நூர் முகமது, பி.கே.மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர்.சரளாதேவி ரெத்தினமூர்த்தி, சி.கே.மங்கலம் கிராமத் தலைவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம், செயலாளர் அன்பு செல்வன், பங்கு பேரவை துணைத்தலைவர் ஜேம்ஸ், செயலாளர் எஸ்.ஆர்.டி. ஜேசுதாஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை சாமு இதயன் தலைமையில் அருட் சகோதரிகள், பங்குபேரவையினர், பங்கு இறை மக்கள் செய்து இருந்தனர்.


Related Tags :
Next Story