தேனியில் பாம்பு பிடிக்கும் நபருக்கு ஊக்கத்தொகை
தேனியில் பாம்பு பிடிக்கும் நபருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
தேனி
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் கண்ணன். இவர் தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாம்புகள் பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மாவட்ட வனத்துறையோடு இணைந்தும் பாம்புகளை பிடித்து வனப்பகுதிகளில் விட்டு வருகிறார். தன்னார்வலராக பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விட்டு வரும், கண்ணனை மாவட்ட வன அலுவலர் சமர்த்தா நேற்று நேரில் அழைத்தார்.
அப்போது அவருக்கு வனத்துறை சார்பில் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். மேலும் பாம்புகளை பாதுகாப்பாக பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு தேவையான உபகரணங்களையும் அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது, தேனி வனச்சரகர் செந்தில்குமார் மற்றும் வனத்துறையினர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story