பொறியியல் துறையில் இந்தியா சாதனை


பொறியியல் துறையில் இந்தியா சாதனை
x

பொறியியல் துறையில் இந்தியா சாதனை படைத்து வருகிறது என மனித வள மேம்பாட்டு துறையின் இயக்குனர் கூறினார்.

விருதுநகர்


பொறியியல் துறையில் இந்தியா சாதனை படைத்து வருகிறது என மனித வள மேம்பாட்டு துறையின் இயக்குனர் கூறினார்.

புத்தாக்க பயிற்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவிலில் வி.பி.எம்.எம். பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி தொடக்க முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு கல்லூரி சேர்மன் வி.பி.எம். சங்கர் தலைமை தாங்கினார். முகாமை தாளாளர் பழனிச்செல்வி சங்கர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். முதல்வர் மணிகண்டன் வரவேற்றார். முதலாம் ஆண்டு மாணவர் இயக்குனர் மகேஸ்வரி மற்றும் இயக்குனர்கள் ஜெயக்குமார், அசோக் குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்.

பொறியியல் துறை

முகாமில் சிறப்பு விருந்தினராக மனித வள மேம்பாட்டு துறையின் இயக்குனர் சார்லஸ் கார்த்திக் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- உலகமே பொறியியல் துறையை நம்பி இயங்குகிறது. பொறியியல் துறை இல்லை என்றால் எந்த உற்பத்தியும் நடைபெறாது.

மேலும் மாணவர்கள் படிக்கும்போதே ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். புதுப்புது தொழில் நுட்பங்களை புகுத்த நீங்கள் முன்வர வேண்டும். தங்களது அறிவை பயன்படுத்தி உலக அளவில் சாதனை படைக்க வேண்டும். உலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இதில் முக்கியமான சாதனை என்னவென்றால் பொறியியல் துறையில் உலக அளவில் இந்தியா சாதனை படைத்து வருகிறது.

இளைஞர்களின் எண்ணிக்கை

இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். எனவே உலக நாடுகள் இந்தியாவை நம்பியே உள்ளன. இதற்கு மாணவர் சமுதாயம் மேலும், மேலும் ஜெயிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முடிவில் பேராசிரியர் சுமதி நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story