மதுஅருந்தி இருந்தால் வாகனத்தை இயங்கவிடாத அதிநவீன ஹெல்மெட் -என்ஜினீயரிங் மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு பரிசு


மதுஅருந்தி இருந்தால் வாகனத்தை இயங்கவிடாத அதிநவீன ஹெல்மெட் -என்ஜினீயரிங் மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு பரிசு
x
தினத்தந்தி 20 Feb 2023 6:45 PM GMT (Updated: 20 Feb 2023 6:46 PM GMT)

மதுஅருந்தி இருந்தால் வாகனத்தை இயங்கவிடாத அதிநவீன ஹெல்மெட் -என்ஜினீயரிங் மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு பரிசு

சிவகங்கை

காரைக்குடி

தற்போது பெரும்பாலான வாகன விபத்துகள், உயிரிழப்புக்கு காரணமாக இருப்பது மது அருந்தி விட்டு வாகனங்களை இயக்குவதுதான். இவற்றைத் தடுக்கும் வகையில் காரைக்குடி சண்முகநாதன் என்ஜினீயரிங் கல்லூரி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை 3-ம் ஆண்டு மாணவர்கள் ஹரிஷ்மாறன், கார்த்திகேயன், சந்தோஷ் ஆகியோர் ஒன்றிணைந்து சென்சார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நவீன தலைக்கவசத்தை(ஹெல்மெட்) வடிவமைத்து உள்ளனர். இந்த தலைக்கவசத்தை அணிந்திருக்கும் போது மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கினால் அந்த வாகனம் இயங்காது. அணியமால் வாகனத்தில் வைத்திருந்தாலும் வாகனம் இயங்காது. இதனால் விபத்துகளும், உயிரிழப்புகளும் குறையும்.

மாணவர்களின் இந்த புது கண்டுபிடிப்பு சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான நவீன கண்டுபிடிப்பு சாதனங்களுக்கான போட்டியில் இடம் பெற்றது. இதில் நவீன தலைக்கவசம் மாநில அளவில் 2-ம் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது. சாதனை படைத்த மாணவர்களை கல்லூரி தாளாளர் பிச்சப்பா மணிகண்டன், செயலாளர் விஸ்வநாதன், முதல்வர் டாக்டர் முத்துராமு, துறைத்தலைவர் சொர்ணலதா மற்றும் அனைத்துப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினர்.


Next Story