ஆண்டிமடம் தாலுகா அலுவலக கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்


ஆண்டிமடம் தாலுகா அலுவலக கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க  வலியுறுத்தல்
x

ஆண்டிமடம் தாலுகா அலுவலக கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அரியலூர்

ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் மருதமுத்து தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் தேன்மொழி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கணக்காளர் பழனிச்சாமி வரவு-செலவு மற்றும் மன்ற விவாத 42 பொருட்களை வாசித்தார். முன்னதாக ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் துறை ரீதியான அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை. இதனால் பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க சிரமமாக உள்ளது. எனவே அனைத்து அலுவலர்களும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, அங்கன்வாடி அலுவலகம் உடனடியாக கட்டித் தர வேண்டும். ஆண்டிமடத்தில் நெசவாளர் குடியிருப்பு கட்டிடம் வாடகை இடத்தில் உள்ளது. அதை உடனடியாக அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டி தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதையடுத்து, ஒன்றிய பெருந்தலைவர் மருதமுத்து பேசும்போது கடந்த ஆட்சியில் ஆண்டிமடம் தாலுகாவாக அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டு தாலுகா அலுவலகம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது மிகவும் தொய்வாக பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக நேரில் சென்று ஆய்வு செய்து மாவட்ட கலெக்டர் மூலம் பணிகள் விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார். முன்னதாக ஒன்றிய மேலாளர் செந்தில்குமார் வரவேற்றார். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.


Next Story