ரேஷன் கடைகளில் பறக்கும் படையினர் ஆய்வு


ரேஷன் கடைகளில் பறக்கும் படையினர் ஆய்வு
x

குறிஞ்சிப்பாடி பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பறக்கும் படையினர் ஆய்வு செய்தனர்.

கடலூர்

கடலூர்,

குறிஞ்சிப்பாடி அருகே சின்னதோப்புக்கொல்லை சுடுகாட்டு பகுதியில் 300 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதை கடலூர் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கைப்பற்றினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து குறிஞ்சிப்பாடி வட்டார பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு செய்ய கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

அதன்படி கடலூர் மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார் தலைமையில் துணை பதிவாளர் (பொது வினியோக திட்டம்) ராஜேந்திரன், சரக துணை பதிவாளர் துரைசாமி மற்றும் 25 கூட்டுறவு சார் பதிவாளர்கள் அடங்கிய பறக்கும் படையினர் குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் அதிரடி ஆய்வு செய்தனர்.

அப்போது ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பு விவரம் சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்தனர். மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும். வெளி நபர்கள், மொத்தமாக யாரிடமும் அரிசி உள்ளிட்ட எந்த பொருட்களையும் வழங்கக்கூடாது என்று விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்கினர். இந்த ஆய்வு மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் நடத்தப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Next Story