அரசு மாணவ-மாணவிகள் விடுதிகளை கோட்டாட்சியர் ஆய்வு


அரசு மாணவ-மாணவிகள் விடுதிகளை கோட்டாட்சியர் ஆய்வு
x

அரசு மாணவ-மாணவிகள் விடுதிகளை கோட்டாட்சியர் ஆய்வு செய்தனர்.

திருச்சி

தா.பேட்டை, ஆக.11-

தா.பேட்டை அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் தங்கி படிப்பதற்கு வசதியாக தனித்தனி விடுதிகள் அமைந்துள்ளது. இந்த விடுதிகளை முசிறி கோட்டாட்சியர் மாதவன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாணவர்கள் தங்கும் இடம், சமையலறை மற்றும் விடுதி சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா என்பதனை ஆய்வு செய்தார். மேலும் மாணவிகளுக்கு மதியம் கோழிக்கறி குழம்புடன் தயார் செய்யப்பட்டிருந்த உணவின் தரத்தையும் பரிசோதனை செய்த கோட்டாட்சியர் மாதவன் மாணவிகள் படித்து உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என்ற நோக்கில் அரசு வழங்கும் பல்வேறு சலுகைகளை பயன்படுத்தி சிறந்த முறையில் கல்வி பயில வேண்டும் எனவும் அறிவுரை கூறினார். இந்த ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர் கீதாஞ்சலி, கிராம நிர்வாக அதிகாரி சிவபிரபு, விடுதி காப்பாளர் எழிலரசி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


Next Story