தீவிர தூய்மைப்பணி சிறப்பு முகாம்


தீவிர தூய்மைப்பணி சிறப்பு முகாம்
x

மணலூர்பேட்டையில் தீவிர தூய்மைப்பணி சிறப்பு முகாம் பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை பேரூராட்சி சார்பில் தீவிர தூய்மைப்பணி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி தலைவர் ரேவதி ஜெயகணேஷ் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் மேகநாதன் வரவேற்றுப் பேசினார். மேலும் பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வியாபார பிரமுகர்களிடம் தீவிர தூய்மைப்பணி முகாம் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார். தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் பேரூராட்சி முழுவதும் உள்ள வார்டுகளில் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், நகர முக்கிய பிரமுகர்கள், பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story