காட்டுப்புத்தூர் பேரூராட்சி கழிவறைகளில் புகார் தெரிவிக்க கியூ ஆர் கோடு அறிமுகம்


காட்டுப்புத்தூர் பேரூராட்சி கழிவறைகளில் புகார் தெரிவிக்க கியூ ஆர் கோடு அறிமுகம்
x

காட்டுப்புத்தூர் பேரூராட்சி கழிவறைகளில் புகார் தெரிவிக்க கியூ ஆர் கோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் உள்ள பேரூராட்சிக்கு பாத்தியப்பட்ட கழிப்பிடங்களில் உள்ள குறைகளை தெரிவிக்க கியூ ஆர் கோடுகளை பேரூராட்சி நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. கழிப்பிடங்களின் செயல்பாடுகள், பராமரிப்பு, தூய்மை ஆகியவற்றை பற்றி கருத்துகளையும், புகார்களையும் பொதுமக்கள் எளிதாக தங்களது அலைபேசி மூலம் அளிப்பதற்கு ஏதுவாக பேரூராட்சிக்கு சொந்தமான பஸ்நிலையம் வடபுறம், வாரசந்தை, மேற்கு தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள கழிப்பறை மற்றும் பொது கழிப்பறைகளில் இந்த கியூ ஆர் கோடுகள் பொருத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல் அமீது தலைமையில் பேரூராட்சி தலைவர் சங்கீதா துணைத்தலைவர் சுதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story