வாணியம்பாடி நகராட்சி பகுதி குறைகளை தெரிவிக்க 'வாட்ஸ் அப்' எண் அறிமுகம்


வாணியம்பாடி நகராட்சி பகுதி குறைகளை தெரிவிக்க வாட்ஸ் அப் எண் அறிமுகம்
x

வாணியம்பாடி நகராட்சி பகுதி குறைகளை தெரிவிக்க ‘வாட்ஸ் அப்’ எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

வாணியம்பாடி நகராட்சி பகுதி குறைகளை தெரிவிக்க 'வாட்ஸ் அப்' எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. நகராட்சி பொது சுகாதாரம், குடிநீர் வினியோகம், மழை நீர் தேங்கியுள்ள இடங்கள், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் ஏற்பட்டால், மக்கள் வாட்ஸ் அப்பில் புகார் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து 73973 92679 எண்ணில் ஆணையாளருக்கும், 73973 92680 எண்ணில் என்ஜினீயருக்கும், 95005 37160 எண்ணில் சுகாதார அலுவலருக்கும் புகார்களை அனுப்பலாம் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story