'அரசியல் சட்டம் ஏற்றுக்கொள்ளாத சனாதனத்தை கவர்னர் தூக்கிப் பிடிப்பது நியாயமில்லை' - கே.பாலகிருஷ்னன் பேட்டி
மத்திய அரசு உடனடியாக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை,
அரசியல் அரிச்சுவடி கூட தெரியாத தமிழக கவர்னரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்னன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"அரசியல் அரிச்சுவடி கூட தெரியாமலா ஒரு கவர்னர் இருப்பார்? ஒரு அமைச்சரை நியமிப்பதும், நீக்குவதும் முதல்-அமைச்சரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்ற குறைந்தபட்ச விஷயம் கூட தெரியாத ஒருவர் கவர்னராக இருப்பது அதிர்ச்சியாக உள்ளது.
சனாதனத்தை அரசியல் சட்டம் ஏற்றுக்கொள்கிறதா? அரசியல் சட்டத்தினால் பதவி வகிக்கும் ஒருவர் அரசியல் சட்டம் ஏற்றுக்கொள்ளாத சனாதனத்தை தூக்கிப் பிடிப்பது நியாயமில்லை. கவர்னர் என்ற பதிவிக்கு இது அழகல்ல. அவர் பதவியை தாமாக ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது மத்திய அரசு உடனடியாக ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும்" என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.