வீடு புகுந்து திருடியவருக்கு 1 ஆண்டு ஜெயில்


வீடு புகுந்து திருடியவருக்கு 1 ஆண்டு ஜெயில்
x

வீடு புகுந்து திருடியவருக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

சிவகங்கை

காரைக்குடி,

பள்ளத்தூர் போலீஸ் சரகம் அழகாபுரி எழில் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி கற்பக செல்வி (வயது 40). ராமச்சந்திரன் அபுதாபியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது சொந்த ஊர் ஜெயங்கொண்டான். சம்பவத்தன்று கற்பகச்செல்வி வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான ஜெயங்கொண்டான் சென்றார். இதற்கிடையே வீட்டில் இருந்த டி.வி, மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், வெள்ளி, பித்தளை பொருட்கள் திருடு போயின. அவற்றின் மதிப்பு ரூ.34 ஆயிரம். இது குறித்த புகாரின் பேரில் பள்ளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த சுண்ணாம்பூர் பகுதியை சேர்ந்த மலைச்சாமி (40), அவரது நண்பர்கள் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருடு போன பொருட்களையும் மீட்டனர். 5 பேர் மீதும் காரைக்குடி கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வராஜ் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயப்பிரதா குற்றம் சாட்டப்பட்ட 5 பேரில் மலைச்சாமிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மற்ற 4 பேரை விடுதலை செய்தார்.Next Story