பெண்ணிடம் நகை பறித்த 2 பேருக்கு ஜெயில்


பெண்ணிடம் நகை பறித்த 2 பேருக்கு ஜெயில்
x

விருதுநகரில் பெண்ணிடம் நகை பறித்த 2 பேருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

விருதுநகரில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் ஜெயராணி என்பவர் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அவரிடம் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து இந்நகர் பஜார் போலீசார் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ரவி என்ற ரவிச்சந்திரன் மற்றும் யோகானந்தன் ஆகிய இருவரையும் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த விருதுநகர் முதல் மாஜிஸ்திரேட் கவிதா குற்றம் சாட்டப்பட்ட ரவிச்சந்திரனுக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், யோகானந்தனுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ. 2ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.Related Tags :
Next Story