ஜல் சக்தி அபியான் திட்ட ஆய்வுக்கூட்டம்


ஜல் சக்தி அபியான் திட்ட ஆய்வுக்கூட்டம்
x

கள்ளக்குறிச்சியில் ஜல் சக்தி அபியான் திட்ட ஆய்வுக்கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஜல் சக்தி அபியான் திட்டப்பணிகள் செயலாக்கம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை(விதைகள்) இயக்குனர் ருக்மணி, மத்திய நிலத்தடிநீர் வாரிய தொழில்நுட்ப அலுவலர் கே.பி.சிங் ஆகியோர் கலந்து கொண்டு ஜல் சக்தி அபியான் திட்டம் குறித்தும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையில் மேற்கொள்ளப்படும் மழைநீர் சேகரிப்பு திட்டப்பணிகள் குறித்தும் விளக்கமளித்தனர். பின்னர் அவர்கள் பேசுகையில், நீர் சேகரிப்பு பணிகளை முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். தற்போது பெய்து வரும் மழைநீரை சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம ஊராட்சி நிர்வாகம் மக்களோடு நெருங்கிய தொடர்புடைய அமைப்பு என்பதால் ஊராட்சிகள் இத்திட்டத்தில் முனைப்புடன் பங்கேற்று செயல்படுத்த வேண்டும். நெல், தினை உள்ளிட்ட பயிர்களை அதிகளவு சாகுபடி செய்ய வேண்டும் என்றனர்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி, துணை இயக்குனர் வேளாண்மை சுந்தரம், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வக்குமார், வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலை துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலாகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story