கிரேன் ஆபரேட்டர் வீட்டில் நகை-பணம் திருட்டு


கிரேன் ஆபரேட்டர் வீட்டில் நகை-பணம் திருட்டு
x

கள்ளக்குறிச்சி அருகே கிரேன் ஆபரேட்டர் வீட்டில் நகை-பணம் திருடு போனது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே கொங்கராயபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் சாமிதுரை(வயது 33). இவர் தென்ஆப்ரிக்காவில் கிரேன் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவர், நேற்று வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் வலசை கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இது பற்றி பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த தகவலின்படி சாமிதுரை விரைந்து வந்து பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரூ.23 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story