பெண்ணிடம் நூதன முறையில் நகை மோசடி; கார் டிரைவருக்கு வலைவீச்சு


பெண்ணிடம் நூதன முறையில் நகை மோசடி; கார் டிரைவருக்கு வலைவீச்சு
x

சாத்தான்குளத்தில் பெண்ணிடம் நூதன முறையில் நகை மோசடி செய்த கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் கொத்துவா பள்ளிவாசல் தெருவை சேர்ந்த யூசுப் என்பவருடைய மனைவி ஜாகிதா (வயது 57). இவரது உறவினரான சாத்தான்குளம் தைக்கா தெருவை சேர்ந்த அபுபக்கர் மகன் முகம்மது யூசுப் அஜிம் (45). கார் டிரைவர். இவர் கடந்த ஆண்டு ஜாகிதாவிடம், கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை அடமானம் வைத்தால் தள்ளுபடி ஆகிவிடும் என கூறி 15 பவுன் நகையை பெற்றுச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் நகையை அடமானம் வைக்காமலும், நகையை திருப்பி தராமலும் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றமடைந்த ஜாகிதா, சாத்தான்குளம் போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஜாண்சன் வழக்குப்பதிவு செய்து யூசுப் அஜிம்மை தேடி வருகிறார்.


Next Story