வேலை வாய்ப்பு முகாம்


வேலை வாய்ப்பு முகாம்
x
தினத்தந்தி 27 March 2023 12:15 AM IST (Updated: 27 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிங்கை சித்தர் அய்யா (எஸ்.எஸ்.ஏ) கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே ஆ.தெக்கூரில் சிங்கை சித்தர் அய்யா (எஸ்.எஸ். ஏ) கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுவிழா, விளையாட்டு விழா, என பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் பல முன்னணி நிறுவனங்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு கல்லூரி மாணவ-மாணவியருக்கு நியமன ஆணைகளை வழங்கி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் சிங்கை சித்தர் அய்யா (எஸ்.எஸ்.ஏ) கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரி தலைவர் சந்திரசேகர், செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கல்லூரி முதல்வர் மணிக்குமார் முன்னிலை வகித்தார்.

முகாமில் யூனிமோனி, நோக்கியா, முத்தூட் பைனான்ஸ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான பணியிடங்களுக்கு கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த நேர்காணலில் அனைத்து துறையைச் சேர்ந்த 3-ம் ஆண்டு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமின் இறுதியில் கல்லூரி தலைவர் சந்திரசேகர் நேர்காணலில் வெற்றி பெற்ற 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பணிநியமன ஆணையை வழங்கி, பாராட்டினார். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ- மாணவியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story