காளியம்மன் கோவில் தேரோட்டம்


காளியம்மன் கோவில் தேரோட்டம்
x

குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

வேலூர்

குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டி காளியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவர் தேரில் அமர்த்தப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தேரோட்டத்தை முன்னிட்டு நேர்த்தி கடனுக்காக பக்தர்கள் ஏராளமான கிடாக்களையும், சேவல்களையும் பலியிட்டனர். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஏ.பி.நந்தகுமார், குடியாத்தம் தொகுதி அமலுவிஜயன் எம்.எல்.ஏ. குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒன்றிய செயலாளர் நத்தம் பிரதீஷ், தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் குடியாத்தம் குமரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பி.அகிலாண்டேஸ்வரி, எஸ்.பி.சக்திதாசன், நகரமன்ற உறுப்பினர்கள் நவீன்சங்கர், எம்.ஏகாம்பரம், என்.கோவிந்தராஜ், சி.என்.பாபு, தி.மு.க. இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் கே.ராஜ்கமல், எம்.சத்தியமூர்த்தி உள்பட ஊராட்சிமன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்கள், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு,பிரகாசம், மொழிமாறன்,தங்கமணி, தினகரன் உள்ளிட்ட விழா குழுவினர், ஊர் பொதுமக்கள், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


Next Story