காமராஜர், தியாகி கே.ஆர். கல்யாணராமன் தங்கிய நினைவிடத்தை புனரமைக்க கோரிக்கை

காமராஜர், தியாகி கே.ஆர். கல்யாணராமன் தங்கிய நினைவிடத்தை புனரமைக்க கோரிக்கை
x

காமராஜர் மற்றும் சுதந்திர போராட்ட தியாகி கே.ஆர். கல்யாணராமன் ஆகியோர் தங்கியிருந்த பழைய நினைவிடத்தை புனரமைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

காமராஜர் மற்றும் சுதந்திர போராட்ட தியாகி கே.ஆர். கல்யாணராமன் ஆகியோர் தங்கியிருந்த பழைய நினைவிடத்தை புனரமைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.

ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் தலைவர் வக்கீல் அண்ணாதுரை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதல்வர் காமராஜர் மற்றும் சுதந்திர போராட்ட தியாகி கே.ஆர் கல்யாணராமன் ஆகியோர் தங்கியிருந்த ராணிப்பேட்டை நகராட்சி வளாகத்தில் உள்ள, பழைய நினைவிடத்தை, புனரமைத்து, அந்த இடத்தில் சுதந்திரப் போராட்ட மாவட்ட தியாகிகளின் புகைப்படங்களை பார்வைக்கு வைக்குமாறும், புனரமைக்க இடத்தினை தமிழக முதல்வர் அவர்களால் திறந்து வைக்க வேண்டும் எனவும்,

சுதந்திரப் போராட்ட தியாகி கே.ஆர் கல்யாணராமன் வாழ்ந்த எம்.எப்.சாலைக்கு அவர் நினைவாக கே.ஆர். கல்யாணராமன் சாலை என்று பெயர் வைக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

இதே கோரிக்கைகள் அடங்கிய மனுவினை ராணிப்பேட்டை நகராட்சியிலும் அளித்தனர். அப்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

==========

Next Story