காஞ்சிபுரம்- இருசக்கர வாகனத்தை திருட முயன்ற 3 இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்
இளைஞர்கள் மூவரும் காயமடைந்ததால், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, இருசக்கர வாகனங்களை திருட வந்த 3 இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இருங்காட்டுக்கோட்டை பகுதியில் நள்ளிரவில், 3 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை திருட முயன்றபோது பொதுமக்களிடம் சிக்கினர். மூவருக்கும் தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இளைஞர்கள் மூவரும் காயமடைந்ததால், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆம்பூரைச் சேர்ந்த அஜய், மதியழகன் மற்றும் வேலூரை சேர்ந்த பாலாஜி ஆகியோர், இருசக்கர வாகனத்தை திருட முயன்றது விசாரணையில் தெரியவந்தது.
Related Tags :
Next Story