கன்னங்குறிச்சி புது ஏரி நிரம்பியது


கன்னங்குறிச்சி புது ஏரி நிரம்பியது
x

தொடர் மழை காரணமாக கன்னங்குறிச்சி புது ஏரி நிரம்பியது.

சேலம்

கன்னங்குறிச்சி:

சேலத்தின் பிரதான நீராதாரங்களில் கன்னங்குறிச்சி புதுஏரி முக்கியமானதாகும். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக ஏற்காடு மலைப்பகுதியில் நீரோடைகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது. இதன்காரணமாக ஏற்காடு மலையில் இருந்து அடிவாரம் வரை உள்ள இடங்களில் கட்டப்பட்டிருந்த அனைத்து தடுப்பணைகளும் நிரம்பி உபரிநீர் புதுஏரிக்கு அதிகளவில் வந்த்து. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு புது ஏரி நிரம்பியது.

இதையடுத்து உபரிநீர் மறுகால் வழியாக வழிந்தோடியது. இந்த நீரானது, கொத்துக்காரன் ஓடை வழியாக மூக்கனேரிக்கு சென்ற வண்ணம் உள்ளது. ஏரி மறுகால் வழிந்தோடியதையொட்டி, கோடிக்கல் முனியப்பனுக்கு கிடா வெட்டி பொதுமக்கள் நேர்த்தி கடன் ெசலுத்தி வழிபட்டனர். புதுஏரி நிரம்பிய தகவல் கிடைத்ததும், சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் ஏரியை கண்டு மகிழ்ந்தனர்.


Next Story