'கர்நாடகத்தில் நண்பர்கள் இருந்தாலும், எதிரிகள் இருந்தாலும்...' - மேகதாது அணை குறித்து அமைச்சர் துரைமுருகன் பேட்டி


கர்நாடகத்தில் நண்பர்கள் இருந்தாலும், எதிரிகள் இருந்தாலும்... - மேகதாது அணை குறித்து அமைச்சர் துரைமுருகன் பேட்டி
x

மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் என அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை,

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று மத்திய ஜல் சக்தி மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இன்று அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் மேகதாது அணை விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், "கர்நாடகத்தில் நண்பர்கள் இருந்தாலும், எதிரிகள் இருந்தாலும் மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் என்பதில் உறுதியாக இருப்போம்" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.




Next Story