சிங்காரவேலவர் கோவிலில் கார்த்திகை வழிபாடு


சிங்காரவேலவர் கோவிலில் கார்த்திகை வழிபாடு
x
தினத்தந்தி 26 March 2023 6:45 PM GMT (Updated: 26 March 2023 6:45 PM GMT)

சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் கார்த்திகை வழிபாடு நடந்தது.

நாகப்பட்டினம்

சிக்கல்:

சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் நேற்று பங்குனி மாத கார்த்திகை வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சிங்காரவேலவருக்கு, பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர், திரவிய பொருட்களால் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கார்த்திகை மண்டபத்தில் சிங்கார வேலவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தளி அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story