ரெயில் மோதி கொத்தனார் பலி


ரெயில் மோதி கொத்தனார் பலி
x

ரெயில் மோதி கொத்தனார் பலியானார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

இரணியல் அருகே உள்ள கண்டன்விளை ரெயில்வே கேட் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் நேற்று மதியம் ஒரு ஆண் பிணம் கிடந்தது. இதுபற்றி நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார்ராஜ் மற்றும் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், பிணமாக கிடந்தவர் கண்டன்விளை சித்தன்தோப்பு பகுதியை சேர்ந்த கொத்தனார் ஜாண் (வயது 57) என்பதும், இவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story