ரூ.7½கோடி கோவில் நிலம் மீட்பு


ரூ.7½கோடி கோவில் நிலம் மீட்பு
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா முத்தூரில் உள்ள மாதவராயப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம் ஊடையம் கிராமத்தில் மொத்தம் 30.40 ஏக்கர் புஞ்சை நிலங்கள் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறை திருப்பூர் இணை ஆணையாளர் குமரகுரு உத்தரவின் பேரில் உதவி ஆணையாளர் செல்வராஜ், தாசில்தார் கோபாலகிருஷ்ணன், சரக ஆய்வாளர் அபிநயா, கோவில் செயல் அதிகாரி திலகவதி மற்றும் கோவில் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் சம்பந்தப்பட்ட நிலத்தை 8 பேர் ஆக்கிரமிப்பு செய்திருந்தது தெரியவந்தது. அவர்கள் தாமாக முன்வந்து அந்த நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். நிலத்தை சுவாதீனம் எடுத்த அதிகாரிகள் அறிவிப்பு பலகையும் வைத்தனர். அந்த நிலத்தின் மொத்த மதிப்பு ரூ.7 கோடியே 50 லட்சம் ஆகும்.


Next Story