பகவதி மலை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


பகவதி மலை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 20 Aug 2023 11:28 PM IST (Updated: 21 Aug 2023 12:50 AM IST)
t-max-icont-min-icon

வேப்பங்காடு பகவதி மலை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

வேலூர்

வேலூர் வேலப்பாடியில் பழமை வாய்ந்த வேப்பங்காடு பகவதி மலை அம்மன் பன்னபேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 21-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு பகவதி அம்மன், பன்னபேஸ்வரர், முருகர், விநாயகர் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. 9 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனிதநீரால் ஸ்ரீபகவதி மலரம்மா தலைமையில் கோவில் கோபுரம், மூலவர்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

இதில் ஆற்காடு மகாலட்சுமி கல்விக்குழும தாளாளர் டி.எல்.பாலாஜி, அப்புபால் பாலாஜி, எம்.ஜி.ஆர். மன்ற வேலூர் மாவட்ட செயலாளர் சூளை மணி, சித்தார்த்தா பள்ளி தாளாளர் விக்னேஷ்குமார், அண்ணாபேரவை ஆனந்தவடிவேல், ராம்குமார், வேலப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிற்பகல் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை தலைவர் தமிழ்புகழேந்தி செய்திருந்தார்.


Next Story