சுடுகாட்டில் குப்பை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு


சுடுகாட்டில் குப்பை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு
x
திருப்பூர்

மூலனூர்:

மூலனூர் அருகே சுடுகாட்டில் குப்பை கொட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுடுகாடு

மூலனூர் பேரூராட்சி பகுதியில் சாணார்பாளையம் ரோடு, மேற்கு தெரு, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுடுகாடுகள் உள்ளன. இதில் மூலனூர், சாணார்பாளையம் கிழக்கு, மற்றும் மேற்கு விநாயகர் நகர், அண்ணாநகர், அருள் ஜோதி நகர், மேற்கு பதி, கொங்கு நகர், வடுகபட்டி பிரிவு, மூவேந்தர் நகர் ஆகிய பகுதியில் இறப்பவர்களின் உடல்கள் இந்த சுடுகாட்டில் எரிக்கவும், புதைக்கவும் செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மூலனூர் காமராஜர் வீதியில் உள்ள சுடுகாட்டில் பேரூராட்சி நிர்வாகத்தினர் குப்பைகளை கொண்டு வந்து கொட்டினர். இது பற்றிய தகவல் அறிந்ததும் அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு சென்றனர். பின்னர் சுடுகாட்டில் குப்பை ெகாட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ெபாதுமக்கள் கூறும்போது "சுடுகாட்டில் குப்பை ெகாட்டினால் சுடுகாடு குப்பை மேடாகும். அப்போது இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யவோ, எரியூட்டவோ முடியாது. மேலும் அடிக்கடிக்கு குப்பைக்கு தீ வைப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படும். எனவே சுடுகாட்டில் குப்ைப கொட்டக்கூடாது. மேலும் இங்குகொட்டிய குப்பையை அள்ளி செல்ல வேண்டும்'' என்றனர்.

மீண்டும் அள்ளப்படும்

மூலனூர் பேரூராட்சி தலைவர் மக்கள் தண்டபாணி கூறும்போது " ஏற்கனவே குப்பை கொட்டிய குப்பை கிடங்கில் குப்பை நிறைந்துவிட்டது. இதனால் பொக்லைன் எந்திரம் மூலம் சமன்செய்யப்படுகிறது. இதற்கு 2 நாட்கள் ஆகும். அதுவரை வார்டுகளில் குப்பை குவிந்து விட்டதால் அவற்றை அள்ளி சுடுகாட்டில் கொட்டினோம்.

அதற்காக காமராஜர் வீதியில் உள்ள சுடுகாட்டு பகுதியில் 3 அடி ஆழத்திற்கு குழிதோண்டி தற்காலிகமாக குப்பை கொட்டப்படுகிறது. பழைய குப்பைகளை சமன் செய்து மீண்டும் இந்த குப்பைகள் அள்ளப்பட்டு பழைய குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படும்'' என்றார்.


Next Story