சென்னை, திருவள்ளூரில் கனமழை: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை...!


சென்னை, திருவள்ளூரில் கனமழை: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை...!
x
தினத்தந்தி 19 Jun 2023 12:56 AM GMT (Updated: 19 Jun 2023 1:29 AM GMT)

சென்னை, திருவள்ளூரில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.

இதனிடையே, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story