ரூ.17½ ேகாடி மதிப்பிலான கொப்பரை கொள்முதல்


ரூ.17½ ேகாடி மதிப்பிலான   கொப்பரை கொள்முதல்
x

ரூ.17½ ேகாடி மதிப்பிலான கொப்பரை கொள்முதல்

திருப்பூர்

காங்கயம்

கொப்பரை விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் அரசு கொள்முதல் மையங்கள் கைகொடுக்கும் விதமாக திருப்பூர் மாவட்டத்தில் ரூ.17.47 கோடி மதிப்பிலான 1,650 டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் பாலசந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

கொப்பரை விலை சரிவு

கடந்த சில மாதங்களாக உற்பத்தி அதிகரிப்பு, விற்பனை குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேங்காய் மற்றும் கொப்பரை விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க கொப்பரைக்கு ஆதார விலை நிர்ணயம் செய்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் அரசு கொள்முதல் மையங்கள் மூலம் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி திருப்பூர் மாவட்டம் காங்கயம், உடுமலை, பெதப்பம்பட்டி, பொங்கலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஒரு கிலோ கொப்பரை ரூ.105.90- க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் கொப்பரையின் விலை வெளிச்சந்தை நிலவரப்படி ரூ.80 ஆக குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் அரசு கொள்முதல் மையங்களில் விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் மூலம் இதுவரை 1,650 மெட்ரிக் டன் அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,239 விவசாயிகள் பயனடைந்துள்ளனர் இதற்காக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.17.47 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 580 டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் விவசாயிகளின் நலன் கருதி அடுத்த மாதம் (ஜூலை) 31-ந் தேதி வரை அரசு மையங்களில் தொடர்ந்து கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது. எனவே தென்னை விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் அருகிலுள்ள கொப்பரை கொள்முதல் மையங்களுக்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம். அரசு கொள்முதல் மையங்களில் கொப்பரை விற்பனை செய்வதன் மூலம் வெளிச்சந்தையை விட கூடுதல் விலை பெற்று விவசாயிகள் பயனடையலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

=========


Next Story