'இணைவோம், மகிழ்வோம்' நிகழ்ச்சி
‘இணைவோம், மகிழ்வோம்' நிகழ்ச்சி
கோத்தகிரி
தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையானது அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் குழந்தைகளின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும், ஒருங்கிணைந்த கல்வி திட்ட அலுவலருமான தாமோதரன் உத்தரவின்படி உதவி திட்ட அலுவலர் குமார் மேற்பார்வையில் கோத்தகிரி வட்டார வள மையம் சார்பில் நெடுகுளா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இணைவோம் மகிழ்வோம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை எலிசபெத் வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுனர்கள் மீனா, ராஜூ, இல்லம் தேடி கல்வி திட்ட தன்னர்வலர் ரேவதி ஆகியோர் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளி மாணவர்களுடன், சக மாணவர்கள் சேர்ந்து காகித பறவை செய்தல், பிரமிடு செய்தல், பலூன் ஊதுதல், சோப்பு நுரை குமிழிகள் விடுதல் உள்ளிட்டவற்றை செய்து மகிழ ஆவன செய்தனர். முடிவில் பிரேமா நன்றி கூறினார். இதேபோன்று கோத்தகிரி பகுதியில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.