விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 28 March 2023 6:45 PM GMT (Updated: 28 March 2023 6:45 PM GMT)

தென்காசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

தென்காசி

தென்காசி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தென்காசி, இலஞ்சி, செங்கோட்டை பார்டர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் வாங்கியிருந்தன. இந்தக் கடனை வட்டியுடன் பெண்கள் செலுத்தி விட்டனர். ஆனால் மேலும் கடன் பாக்கி உள்ளது என்று கூறி அந்த பெண்களின் சிபில் ஸ்கோரை நிதி நிறுவனம் முடக்கியுள்ளது. பலமுறை பாதிக்கப்பட்ட பெண்கள் அங்கு சென்று கேட்கும் போது நிதி நிறுவனத்தார் முறையான பதில் அளிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனி அருள் சிங் தலைமையில் மாவட்ட செய்தி தொடர்பாளர் சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் ஏ.எம்.சித்திக், ஒன்றிய செயலாளர் பிரபாகரன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நிதி நிறுவனத்தின் உள்ளே சென்று உள்ளிருப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் இதுகுறித்து தென்காசி போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story