மோட்டார் சைக்கிள் விபத்தில் எல்.ஐ.சி. ஏஜெண்டு சாவு


மோட்டார் சைக்கிள் விபத்தில் எல்.ஐ.சி. ஏஜெண்டு சாவு
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 23 Nov 2022 6:46 PM GMT)

சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் எல்.ஐ.சி. ஏஜெண்டு இறந்தார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் கோமதியாபுரம் 5-ம் தெருவை சேர்ந்தவர் முத்துராம கிருஷ்ணன் (வயது 55). எல்.ஐ.சி. ஏஜெண்டு. இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் நெல்லை ரோட்டில் வந்து கொண்டிருந்தார். குதிரைகோவில் அருகே வரும்போது நாய் குறுக்கே வந்துள்ளது. அப்போது திடீரென்று பிரேக் பிடித்ததால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து முத்துராம கிருஷ்ணன் தவறி விழுந்தார். இதில் காயமடைந்த முத்து ராமகிருஷ்ணன் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முத்து ராமகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சின்ன கோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story