லாரி டிரைவர் 'திடீர்' சாவு


லாரி டிரைவர் திடீர் சாவு
x

லாரி டிரைவர் திடீரென இறந்தார்.

பெரம்பலூர்

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் துறைமங்கலம் அணுகு சாலை அருகே நேற்று மதியம் 3 மணியளவில் நின்று கொண்டிருந்த லாரியில் ஆண் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, பெரம்பலூர் போலீசார் லாரியில் இறந்தவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர் திருப்பத்தூர் மாவட்டம், சித்தேரியை சேர்ந்த பாபு (வயது 55) என்பதும், அவர் தான் அந்த லாரி டிரைவர் என்பதும் தெரியவந்தது.

பாபு நேற்று முன்தினம் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இருந்து லாரியில் கண்ணாடி பொருட்களை ஏற்றி கொண்டு மதுரையில் இறக்கி விட்டு மீண்டும் சென்னை செல்வதற்காக நேற்று அதிகாலை புறப்பட்டார். அப்போது காலை 11 மணியளவில் பாபு தனது லாரி மேலாளருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார். அதற்கு மேலாளர் பாபுவிடம் பெரம்பலூரிலேயே லாரியை நிறுத்தி விட்டு, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஓய்வெடுக்கும்படி கூறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மதியம் லாரியிலேயே பாபு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார் என்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story