லாட்டரி சீட்டு விற்றவர் கைது


லாட்டரி சீட்டு விற்றவர் கைது
x

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

தஞ்சாவூர்

கபிஸ்தலம் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

ரோந்து பணி

கபிஸ்தலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பு நம்பியார், அன்பழகன் மற்றும் போலீசார் கபிஸ்தலம் போலீஸ் சரக பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கபிஸ்தலம் அருகே உள்ள கணபதி அக்ரஹாரம் பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

2 செல்போன்கள் பறிமுதல்

விசாரணையில் அவர் கபிஸ்தலம் அருகே உள்ள சீதாலட்சுமிபுரம் ஜீவா நகரை சேர்ந்த உமாபதி(வயது40) என்பதும், அவர் லாட்டரி சீட்டு விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உமாபதியை கைது செய்து அவரிடம் இருந்து 2 செல்போன்கள், ரூ. 650 ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story