சக்தி விநாயகர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்


சக்தி விநாயகர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 22 Feb 2023 6:45 PM GMT (Updated: 22 Feb 2023 6:46 PM GMT)

கூடலூரில் பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

நீலகிரி

கூடலூர்

கூடலூரில் பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

கும்பாபிஷேக விழா

கூடலூர் நகரில் பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று(வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு நடக்கிறது. விழாவையொட்டி கடந்த 20-ந் தேதி காலை 9 மணிக்கு தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து 21-ந் தேதி யாக சாலையில் முதற்கால பூஜையும், பல்வேறு விசேஷ பூஜைகளும் நடைபெற்றது.

நேற்று காலை 9 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், இரவு 7 மணிக்கு 3-ம் கால யாக பூஜையும், தொடர்ந்து மூலவர் உள்பட பரிவார தெய்வங்களின் விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்தல், கணபதி வழிபாடு, ஆகம திருமுறை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் பல்வேறு ஹோமங்களும் நடைபெற்றது.

மகா தீபாராதனை

இன்று காலை 7.30 மணிக்கு கூனம்பட்டி ஆதீனம் மாணிக்க சுவாமிகள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை நடத்தி வைக்கின்றனர். தொடர்ந்து பரிவார தெய்வங்களின் சன்னதியில் கோபுர கலசங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.

பின்னர் அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடக்கிறது. இதற்காக ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.


Next Story