கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் போலீசார் முன்பு ரகளையில் ஈடுபட்டவர் கைது


கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில்  போலீசார் முன்பு ரகளையில் ஈடுபட்டவர் கைது
x

கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் போலீசார் முன்பு ரகளையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

தஞ்சாவூர்

கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் போலீசார் முன்பு ரகளையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

அபராதம் விதிப்பு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த தாராசுரம் எலுமிச்சங்காபாளையத்தை சேர்ந்த மோகன் என்கிற வீரமைந்தன்(வயது 44) என்பவரை போலீசார் வழிமறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது மோகன் மது அருந்திவிட்டு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. இதனால் போலீசார், மோகனுக்கு அபராதம் விதித்துள்ளனர். இது தொடர்பாக மோகன், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆஸ்பத்திரியில் ரகளை

இதனையடுத்து போலீசார், மோகனை கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்களின் மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்காமல் மோகன், தான் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி வீசிவிட்டு அரை நிர்வாண கோலத்தில் ஆஸ்பத்திரி வளாகத்தில் போலீசார் முன்பாக ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் அங்கு இருந்த போலீசார் மற்றும் மருத்துவ பணியாளர்களை தரக்குறைவாகவும், தகாத வார்த்தைகளாலும் திட்டி உள்ளார்.

வீடியோ வைரல்

இதனை அங்கு நின்றிருந்த சிலர் தங்களுடைய செல்போனில் வீடியோ எடுத்தனர். மேலும் ஆஸ்பத்திரி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவிலும் மோகன் ரகளையில் ஈடுபட்ட காட்சிகள் பதிவாகி உள்ளன. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாக கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனை கைது செய்தனர்.


Next Story