மாரத்தான் போட்டி


மாரத்தான் போட்டி
x

தாயில்பட்டி அருகே மாரத்தான் போட்டி நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

நேரு யுவகேந்திரா விருதுநகர் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து இந்தியன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக 75-வது ஆண்டு சுதந்திர தின விழா மற்றும் உலக இளைஞர்கள் தினத்தைெயாட்டி மினி மாரத்தான் போட்டி வெம்பக்கோட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வெம்பக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகத்தாய் முன்னிலை வகித்தார். விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சமூக சுகாதார அலுவலர் ராஜ்குமார் கலந்து கொண்டார். மினி மாரத்தான் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் பரிசாக ரூ. 5 ஆயிரத்தை ராஜபாளையம் இளைஞர் மாரி சரத் பெற்றார். 2-வது பரிசாக ரூ.3 ஆயிரத்தை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அஜித்குமாரும், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரத்தை வெம்பக்கோட்டை சேர்ந்த ஜான் பிரிட்டோ என்பவரும் பெற்றார். மேலும் 10 நபர்களுக்கு பதக்கமும், பாராட்டு சான்றிதழும், வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டது.



Next Story