மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 March 2023 6:45 PM GMT (Updated: 28 March 2023 6:47 PM GMT)

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

மயிலாடுதுறை

ராகுல்காந்தியின் எம்.பி., பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் ஸ்டாலின், துரைராஜ், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல் ராஜ் கலந்து கொண்டு பேசினார். இதில் கட்சியின் நிர்வாகிகள் வெண்ணிலா, மார்க்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் விஜய் நன்றி கூறினார்.


Next Story