விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை


விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை
x

ஆலங்குடி அருகே கொடுத்த பணத்தை கேட்டு தொந்தரவு செய்ததால் விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார். இது சம்பந்தமாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை

கொத்தனார் தற்கொலை

ஆலங்குடி அருகே சூத்தியன்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 50). கொத்தனார். இவரது மனைவி பெரியநாயகி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆனந்தகுமார் ஆலங்குடி பகுதியை சேர்ந்த மதியழகன் (60), மாணிக்கம் (30) ஆகிய இருவரிடமும் கடன் வாங்கியுள்ளார். மேலும் இவர்கள் இருவரும் கொடுத்த பணத்தை கேட்டு ஆனந்தகுமாரை தொந்தரவு செய்து வந்தாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அவரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஆனந்தகுமார் பரிதாபமாக இறந்தார்.

2 பேர் கைது

இதுகுறித்து பெரியநாயகி ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து, மதியழகன், மாணிக்கம் ஆகிய இருவரையும் கைது செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்ப்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.


Next Story