இடிந்து விழும் நிலையில் ஆடு வதைக்கூடம்


இடிந்து விழும் நிலையில் ஆடு வதைக்கூடம்
x
தினத்தந்தி 28 March 2023 7:00 PM GMT (Updated: 28 March 2023 7:00 PM GMT)

நாகையில் இடிந்து விழும் நிலையில் ஆடு வதைக்கூடம் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நாகப்பட்டினம்

நாகையில் இடிந்து விழும் நிலையில் ஆடு வதைக்கூடம் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஆடு வதைக்கூடம்

நாகை உழவர் சந்தை அருகே ஆடு வதைக்கூடம் உள்ளது. பாரதி மார்க்கெட் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்து கொண்டு வரப்படும் ஆடுகள் இங்கு வெட்டப்பட்டு இறைச்சியாக விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆடுவதைக்கூட கட்டிடம் சேதம் அடைந்து இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் பக்கவாட்டு அடிப்பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து காணப்படுகிறது.

இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆடு வதைக்கூடத்துக்கு அச்சத்துடன் வந்து செல்கின்றனர். மேலும் அருகில் உள்ள பக்கிங்காம் கால்வாய் குப்பை, கூளங்களாக காட்சி அளிக்கிறது.

கழிவுநீர்

இதனால் கால்வாயில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதால், பாரதி மார்க்கெட்டுக்கு இறைச்சி வாங்க வரும் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர். எனவே ஆபத்தான நிலையில் உள்ள ஆடு வதைக்கூட கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டித் தர வேண்டும்.

பக்கிங்காம் கால்வாயில், தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றி கழிவு நீர் முறையாக வடிந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


Next Story