தமிழகம் வரும் பிரதமருடன் சந்திப்பு? - ஓ.பன்னீர்செல்வம் பளிச் பதில்


தமிழகம் வரும் பிரதமருடன் சந்திப்பு? - ஓ.பன்னீர்செல்வம் பளிச் பதில்
x

தொண்டர்களை ஒருங்கிணைத்து அதிமுகவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என ஓ,பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

மதுரை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொண்டர்களின் இயக்கமாக உருவாக்கினார். அவரது வழியில் புரட்சித்தலைவி அம்மாவும் இந்த இயக்கத்தை தொண்டர்களின் இயக்கமாக யாரும் வெல்ல முடியாத இயக்கமாக வடுவாக வளர்த்தார்.

வலிமையான அ.தி.மு.க. என்ற இயக்கத்தை 50 ஆண்டுகளாக வளர்த்து வலிமையான இயக்கமாக இருபெரும் தலைவர்களும் தொண்டர்கள் கையில் தந்துள்ளனர். அ.தி.மு.க.வில் உள்ள அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து மேலும் இந்த இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

கவர்னரை பதவி விலக வேண்டுமென தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. கவர்னரின் செயல்பாடு எப்படி உள்ளது என்று நிருபர்கள் கேள்வி விடுத்தனர்.

இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் கவர்னரை பற்றி தற்போது கருத்து கூறுவது ஏற்புடையது அல்ல என்றும், தமிழகம் வரும் பிரதமரை சந்திக்க வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு பிரதமர் தமிழகம் வருவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அப்படி அவர் வந்தால் சந்திப்பேன் என்று தெரிவித்தார்.


Next Story