வியாபாரிகள் சங்க நிர்வாகக்குழு கூட்டம்


வியாபாரிகள் சங்க நிர்வாகக்குழு கூட்டம்
x

நெல்லை டவுனில் வியாபாரிகள் சங்க நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை டவுன் வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகக்குழு கூட்டம், சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் ஸ்டீபன் பிரேம்குமார் தலைைம தாங்கினார். பொருளாளர் மீரான், துணைத்தலைவர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் வெங்கட்ராமன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோவில் ஆனி தேர் திருவிழாவை முன்னிட்டு, 4 ரத வீதிகளில் சாலைகளை செப்பனிட்டு சீரமைக்க வேண்டும். நெல்லை டவுன் தெற்கு ரத வீதி வாகையடி முனையில் கழிவுநீர் ஓடை பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க துணை செயலாளர் பகவதிராஜன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தர்மராஜ், செல்லச்சாமி, பத்ருஜமான், முகம்மது அலி சித்திக், சேதுராமச்சந்திரன், இம்மானுவேல், கான் முகம்மது, மனோகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story