மகா மாரியம்மன் கோவில் உற்சவ விழாவையொட்டி பால்குட ஊர்வலம்


மகா மாரியம்மன் கோவில் உற்சவ விழாவையொட்டி பால்குட ஊர்வலம்
x

மகா மாரியம்மன் கோவில் உற்சவ விழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடந்தது.

திருச்சி

திருச்சி:

திருச்சி, தாராநல்லூர் தெற்கு தெருவில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் 50-ம் ஆண்டு உற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று அதிகாலை கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காவிரி ஆறு அம்மாமண்டபம் படித்துறையில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்தபடி கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். இதையடுத்து அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. இன்று (திங்கட்கிழமை) இரவு கமல வாகனத்திலும், நாளை (செவ்வாய்க்கிழமை) அன்ன வாகனத்திலும், நாளை மறுநாள் (புதன்கிழமை) குதிரை வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடக்கிறது. வருகிற 2-ந் தேதியன்று காலை அம்மன் தேரில் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 3-ந் தேதி மாலை திருவிளக்கு பூஜை நடக்கிறது.


Next Story