மத்தியில் மீண்டும் மோடி அவர்கள் பிரதமராக வருவது தான் நாட்டுக்கு நல்லது - டி.டி.வி. தினகரன்


மத்தியில் மீண்டும் மோடி அவர்கள் பிரதமராக வருவது தான் நாட்டுக்கு நல்லது - டி.டி.வி. தினகரன்
x
தினத்தந்தி 19 April 2024 6:47 PM IST (Updated: 19 April 2024 6:49 PM IST)
t-max-icont-min-icon

சென்னை தாமோதரபுரம் வாக்குச்சாவடியில் அ.ம.மு.க.பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது குடும்பத்துடன் வந்து வாக்கினை செலுத்தினார்.

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்காக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்த வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

இந்த நிலையில், சென்னை தாமோதரபுரம் வாக்குச்சாவடியில் அ.ம.மு.க.பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது குடும்பத்துடன் வந்து வாக்கினை செலுத்தினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டி.டி.வி. தினகரன் கூறியதாவது,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்கு பின், தேனி மக்களவை தொகுதி அ.ம.மு.க கோட்டையாக மாறிவிட்டது. 100 சதவிகிதம் தமிழக மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும்.

மத்தியில் மீண்டும் மோடி அவர்கள் பிரதமராக வருவது தான் நாட்டுக்கு நல்லது. சென்னை போன்ற மாநகரங்களில் மக்கள் மோடிக்கு ஆதரவாக உள்ளார்கள். அதை வாக்குப்பதிவு மூலமே நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.




Next Story